பீகார் மாநிலத்தில் புகழ்பெற்ற ஜிதியா என்ற பண்டிகை கொண்டாடப்படும். இந்த பண்டிகையானது தங்களுடைய குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் சிறப்பான முறையில் கொண்டாடுவார்கள். இந்தப் பண்டிகையின் போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கங்கை நீரில் மூழ்குவார்கள்.
இந்நிலையில் பண்டிகை தினத்தை முன்னிட்டு இன்று கங்கை நீரில் மூழ்கும் போது ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது நீரில் மூழ்கிய 37 குழந்தைகள் உட்பட 46 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பீகார் மாநில அரசு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
