
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி பகுதியில் கோகுலேஸ் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இங்கு இன்று காலை தொழிலாளர்கள் வழக்க போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் சிக்கி ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் சென்றுள்ள நிலையில் அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.