தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் சிறு தானிய இயக்கத்தை செயல்படுத்த 52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று எண்ணெய் வித்துக்கள் இயக்கம் 108 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், இதன் மூலம் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் சாகுபடி பரப்பை அதிகரித்து உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த 160 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்காச்சோள சாகுபடி பரப்பு , உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் அமைக்க 40.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தி உற்பத்தியை அதிகரிக்க பருத்தி உற்பத்தி பெருக்கு திட்டத்திற்கு 12 புள்ளி 21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.