
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்த நிலையில் இது தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகி லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து தேவஸ்தானம் அறிக்கை அளிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில் தற்போது தேவஸ்தான அதிகாரி சியாமளாராவ் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் லட்டுவில் சேர்க்கப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உண்மை என்று தெரிவித்துள்ளார். நெய்யில் தான் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாகவும் அதோடு பாமாயில் உள்ளிட்ட பொருள்களும் கலக்கப்பட்டதாகவும் ஆய்வில் தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த AR Dairy நெய் நிறுவனத்திற்கு தடை விதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.