தமிழகத்தில் திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அனைத்து பெண்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 5,000 ரூபாய் வரவு வைத்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதேபோன்று அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் மகளிர் தின கொண்டாட்ட விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் பெண்களுக்கான பல அதிரடி வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.

அதன்படி தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் தரும் 2500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதாவது 60 வயது வரை உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வருஷத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.