நியூசிலாந்தில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தற்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உணவு, உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை தேடி மக்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். மக்களை பாதுகாக்கும் பணிகளில் அந்நாட்டு போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.