நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலையை தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி (Nayara Energy) அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் முதல் 5 ரூபாய் 30 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. நயாரா நிறுவனத்தின் இந்த விலை உயர்விற்குப் பிறகு, தற்போது 1 லிட்டர் பெட்ரோலின் விலை சுமாராக ₹108.05-க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும், கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் உள்ள சிரமங்களாலும் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதாக நயாரா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் உள்ள பிரீமியம் ரக பெட்ரோல் வகைகளின் விலைகள் ஏற்கனவே உயர்த்தப்பட்டிருந்தன. மேலும் இந்த நிலையில், தனியார் நிறுவனமான நயாரா இந்த அதிரடி விலை உயர்வை அறிவித்துள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
