
செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 25,965 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படுகிறது. இன்று 13,960 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, நகர்ப்புறங்களில் நீண்டகாலமாக வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். செய்யூர் பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில்நுட்ப பூங்கா அமைகிறது. இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலமாக விளங்கும் தமிழ்நாடு. சில தடைகள் இல்லாமல் இருந்தால் தமிழகம் மேலும் வேகமாக வளரும். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒன்றிய அரசு புகுத்த நினைக்கும் நாக்பூரின் நாசக்கார கொள்கையை பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் நாங்கள் ஏற்க மாட்டோம்.
இந்தியை ஏற்றால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி என மத்திய அமைச்சர் திமிராக பேசுகிறார். கல்வியில் இருந்து மாணவர்கள் நீக்கம் செய்வதற்கான அத்தனை செயல் திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையில் உள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிளாக் மெயில் செய்கிறார். மத்திய அரசின் சதிகளுக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து போராடுவதால் பொறுக்க முடியவில்லை. தமிழகத்தின் உரிமைகளுக்காக திமுக எம்பிக்கள் போர் குணத்தோடு போராடுகின்றனர் என கூறியுள்ளார்.