நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் லாரா (17) தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் மகளின் உடலை பார்த்து விஜய் ஆண்டனி, கதறி துடித்துக் கொண்டு இருக்கிறார். தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்