தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் 20 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த வருடம் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இது தொடர்பாக சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2014ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில் கடந்த 21ஆம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகினர்.

இந்த வழக்கில் நீதிபதி விசாரித்த போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாக கூறிய நிலையில் நவம்பர் 27ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர். மேலும் அந்த வகையில் இன்று விசாரணைக்கு வந்த போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது