மதுரை திருப்பரங்குன்றத்தில் மலை மீது முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது. இந்த நிலையில் இங்கு மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றத்தில் இந்து அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்த நிலையில் அவர் மலை மீது தீபம் ஏற்ற அனுமதித்தார். ஆனால் தமிழக அரசு அதனை தடுத்ததோடு அவ்வாறு செய்தால் பிரச்சனைகள் வரலாம் என்பதால் இதற்கு எதிராக மதுரை கிளை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மதுரை கிளை நீதிமன்றத்தில் 2 அமர்வுகள் கொண்ட நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் முடித்து வைத்தது. தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனின் உத்தரவை அவர்கள் உறுதி செய்தனர். மேலும் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
