திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளம், மீட்பு பணியை மற்றும் நிவாரண பணிகளால் திமுக இளைஞரணி மாநாடு இரண்டாவது முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஜனவரி 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தேசிய தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.