கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளராக இருந்த கே.எஸ். நவாப் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகராட்சி ஆணையரை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் திமுக ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் அவர் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக திமுக மேல் இடத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதன் காரணமாக அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக திமுக தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக இன்று முதல் அவர் அடிப்படை உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.