ரஜினிகாந்த் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி சுதாகர் உடல் நலக்குறைவால் சற்று முன் காலமானார். ரஜினியின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்தை கவனித்து வந்த சுதாகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சற்று முன் உயிரிழந்தார். அவரது உடலுக்கு ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். மேலும் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.