தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம்  சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இன்று காலை முதலே தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் உள்ள 16 தொகுதிகளிலும் விஜய் கட்சியினர்தான் முன்னிலை வகிக்கிறார்கள். குறிப்பாக பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கி வருவதாகவே பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு அதிமுக 73 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் திமுக 52 இடங்களில் தான் முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்தக் கட்சியில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் அவரவர் தொகுதிகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் இருப்பதால் கிட்டத்தட்ட ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது.