ஆலிவ் பச்சை (Olive green) நிற வாகனங்களை பதிவு செய்வதை தமிழக போக்குவரத்துத் துறை தற்காலிமாக நிறுத்தியுள்ளது. பாதுகாப்புத் துறை வாகனங்கள் மட்டுமே இந்நிறத்தை பயன்படுத்த மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்நிறத்தை ரேஞ்சர் காக்கி, எமரால்ட் பியர்ல் என வெவ்வேறு பெயர்களில் வெளியிடுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, மத்திய அரசிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது