தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் பசி போக்கும் மையங்களாக விளங்கும் அம்மா உணவகங்களை மேம்படுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த சில காலமாகப் போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்ட அம்மா உணவகங்களைப் புதுப்பிக்கவும், அங்கு நிலவும் அடிப்படை வசதிகளைச் சீரமைக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாகவும், தரம் குறையாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், உணவுகள் தங்கு தடையின்றி கிடைப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் செய்திட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திடீர் அறிவிப்பு சாமானிய மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.
