தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 3 தொகுதிகளில் தமாகா போட்டியிடும் நிலையில், 2  தொகுதிகளுக்கான வேட்பாளர்களைஅறிவித்துள்ளார் ஜிகே வாசன். அதன்படி ஈரோடு – விஜயகுமார் சேகர், ஸ்ரீபெரும்புதூர் – வி.என் வேணுகோபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்படும் என வாசன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது