தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடக்க நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் பல முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 8 மணி நேர வேலையை பன்னண்டு மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிசம், மதிமுக மற்றும் மமகஉள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சட்டத்தை இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.