
தமிழகத்தில் இன்று காலை முதல் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையிலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.