தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

கடந்த 4 வருடங்களில் மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயத்திற்காக 1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் 510 கோடி செலவில் மானிய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.