2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 23 – 24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

காகிதம் இல்லா இ- பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இன்று பிற்பகலில் அலுவல் ஆய்வு குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது ? என்பது குறித்து முடிவு செய்யும். கடந்த ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையின் படி முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் வரும் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும் பள்ளிக்கல்வி 40299 கோடி ஒதுக்கீடு. பாளை சித்த மருத்துவ கல்லூரி கல்லூரிக்கு 40 கோடி ஒதுக்கீடு இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட 223 கோடி ஒதுக்கீடு பட்ஜெட்டில் மருத்துவ துறைக்கு 18,661 கோடி நிதி ஒதுக்கீடு