தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இதேபோன்று பிற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு மே 8-ம் தேதி வெளியாகும் என்று தற்போது தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் முன்னதாக மே 9-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரிசல்ட் குறித்த தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.