
நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். இதன் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் நாளை குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் இந்த விதியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.