இன்று 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் முடிந்து நேற்று முதல் பலரும் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதையொட்டி, சென்னைக்கு 16, 17, 18 தேதிகளில் மொத்தம் 15,599 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று சென்னைக்கு இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,941 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளில் 2,061 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.