தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. மழை அதிகம் உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு ரெட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் அதிதீவிர கன மழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மழை அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் உஷார் நிலையில் இருக்கும் நிலையில் இன்று மற்றும் நாளை கடற்கரை அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.