தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான 2025 ஆம் ஆண்டு கூறிய பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை. அதன் பிறகு ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதேபோன்று பிப்ரவரி 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு விடுமுறை. மார்ச் 31ஆம் தேதி திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகைக்காக விடுமுறை. ஏப்ரல் 14ஆம் தேதி திங்கட்கிழமை தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு விடுமுறை.

மே 1ஆம் தேதி வியாழக்கிழமை மே தினத்தை முன்னிட்டு விடுமுறை. ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை. ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன் கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை. அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி யை முன்னிட்டு வியாழக்கிழமை விடுமுறை. அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திங்கள் கிழமை விடுமுறை. இதைத்தொடர்ந்து டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை விடுமுறை. மேலும் மொத்தமாக ‌ ரேஷன் கடை ஊழியர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.