தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, நாகை, திருவாரூர், தஞ்சை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.