
தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில மருத்துவமனைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இன்று மாலை புயல் கரையைக் கடக்கும் நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் எதிரொலியாக தமிழகத்தில் தற்போது 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி டிசம்பர் 10-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.