தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முதல் ரக தக்காளி 120 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தக்காளி 80 ரூபாய்க்கும் மூன்றாம் ரக தக்காளி 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தமிழகத்தில் விளையும் தக்காளி விற்பனைக்கு வர தொடங்கியுள்ளதால் விலை வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளது. இதனால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.