இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்கதையாகிவிட்டது. சமீபத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் அனுமதி வாங்கி மீன்பிடித்து விட்டு திரும்பிய போது அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

இந்நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி கைது செய்துள்ளது. மேலும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவு துறை மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.