தமிழகத்தில் தற்போது மலை ஏற்ற சுற்றுலாவுக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 15ஆம் தேதி வரை தடை நீடிக்கும்.

அதாவது இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்தல், காட்டு தீ போன்ற அபாயங்களை தடுப்பதற்காக ட்ரெக்கிங் செல்ல வனத்துறை தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

மேலும் இந்த தடையை மீறி டிரெக்கிங் செல்வோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.