வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் அதன் பின் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு வன்முறை நடந்தது. இருப்பினும் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் இந்து அமைப்பினர் கொல்லப்படுவது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ஐபிஎல் ஏலத்தில் ரூ.9 கோடிக்கும் அதிகமான தொகைக்கு வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா அணி வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு இந்து அமைப்புகள் ஷாருக்கானுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிசிசிஐ செய்ய அவரை உடனடியாக அணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கு தற்போது வங்கதேச கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா வர மாட்டோம் என தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுடைய போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்த வேண்டும் என அவர்கள் ஐசிசிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.
