திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் இந்த விழாவை காண உள்ளூர் மட்டும் என்று வெளியூர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். இதன் காரணமாக நேற்று முதல் 9 நாட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 156 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ‌ விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு தற்போது டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தீபத் திருவிழாவை முன்னிட்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதன்படி டிசம்பர் 12 முதல் 3 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதனை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.