தமிழக வெற்றி கழகம் மீது இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ், சிபிஐ, விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இதுவரை ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது மன்னார்குடி எம்எல்ஏ காமராஜூம் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அனைவருமே ஆளுநர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் பாஜக தமிழ்நாட்டில் புகுந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு பாஜக எம்எல்ஏவான போஜராஜன் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்த நிலையில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி வாக்கெடுப்பிலிருந்து விலகி நிற்பதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போது வரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு 115 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தான் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மமக எம்எல்ஏ ஜவஹருல்லா தமிழக வெற்றி கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினரிடம் மூடநம்பிக்கையை ஒழித்து அறிவியல் மனப்பான்மையை இந்த அரசு வளர்க்க வேண்டும் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசியசட்டமன்றத்தில் பேசிய மஜக எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி, “தனிமனிதர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை நான் மதிக்கிறேன். உங்களுடைய நம்பிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தனிப்பட்ட நம்பிக்கைகளை அரசுக்குள் கொண்டு வருவதை கடுமையாக விமர்சித்தார். “அதே நேரத்தில், உங்கள் நம்பிக்கை சார்ந்த உணர்வுகளை அரசுக்குள் கொண்டு வருவதையும், ஜோதிடத்தை அரசுமயம் ஆக்குவதையும் ஒருபோதும் ஏற்க முடியாது; இதனை நான் உறுதியாக எதிர்க்கிறேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதாவது ஜோசியக்காரர் ஒருவருக்கு முதலமைச்சர் விஜய் அரசு பதவி கொடுத்ததால் தற்போது அவையின் பலர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதேபோன்று உதய சூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற கொமதேக கட்சியின் எம்எல்ஏ நித்யானந்தமும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
