சென்னையில் கடந்த 3 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2800 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 9320 ரூபாய்க்கும், ஒரு சவரன் 74,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 10168 ரூபாய்க்கும், ஒரு சவரன் 81, 344 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது ‌