
ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹரியானா தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் யார் வெற்றி வாகை சூடுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் தற்போது காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதியாகியுள்ளது. அதன்படி ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களில் வெற்றி தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் பிறகு பாஜக 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இதனால் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.