தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலவியதால் 3 நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ததால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதோடு பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது. அதன்பின் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததால் நேற்று சென்னை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதோடு வெயில் அடிக்க ஆரம்பித்தது.

இதனால் நேற்று வழக்கம்போல் பள்ளி கல்லூரிகள் செயல்பட்ட நிலையில் இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது இன்று சென்னையில் வழக்கம்போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.