நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். குறிப்பாக காளியம்மாள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகிய நிலையில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட அடுத்தடுத்து விலகுகிறார்கள்.

இப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிர்வாகி நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அதாவது சேலம் மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளராக இருந்த கோ. கிருஷ்ணராஜன் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தன்னுடைய பயணம் தமிழ் தேசிய பாதையில் செல்ல வேண்டும் குறிப்பிட்டுள்ளார். இது சீமானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாம் தமிழர் கட்சியில் இருந்து பிற கட்சிகளில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.