புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் நேற்று மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர்த்திருவிழாவின் போது இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் 22 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததாகவும் செய்திகள் பரவியதோடு வீடுகளுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவல்களை புதுக்கோட்டை காவல்துறையினர் மறுத்துள்ளனர். இது பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது தொடர்பாக இருதரப்பினர் இடையே குடிபோதையில் மோதல் ஏற்பட்டது. இதில் போலீஸ்காரர்களுக்கு அரிவாள் விட்டு விழுந்ததாகவும் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளில் உண்மை கிடையாது.

இந்த விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக பொய் செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.