ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று வர்த்தக சிலிண்டர்களின் விலை ₹12.5 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை ₹1924.50 என்று விற்பனை ஆன வர்த்தக கேஸ் சிலிண்டர்கள் இன்று முதல் ₹1937 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ₹918.50 என்று விற்பனை ஆகிறது