
கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதோடு கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இமாச்சல் பிரதேசத்திலும் மேக வெடிப்பு காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதாவது அந்த மாநிலத்தில் உள்ள மண்டி மற்றும் சிம்லா ஆகிய பகுதிகளில் இன்று காலை மழை பெய்த நிலையில் மேக வெடிப்பின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் 40 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர் நாத்திலும் மேக வெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அங்கும் தொடர்ந்து புனித யாத்திரைக்கு சென்ற 200 பக்தர்கள் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.