கேரள மாநிலத்தில் மொத்தம் 104 சட்டப்பேரவை தேர்தல்களுக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கேரளாவில் முன்னிலை வகித்து வருகிறது.

அதன்படி காங்கிரஸ் 81 தொகுதிகளுக்கும் அதிகமாக முன்னிலையில் இருக்கும் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி 55 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.