
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோல் டீசல் விலை மற்றும் சிலிண்டர் விலை போன்றவைகள் மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 5.50 வரையில் உயர்ந்து ஒரு சிலிண்டர் 1965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும் அதே நேரத்தில் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.