தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமும், பிரபல ரேஸருமான ‘தல’ அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட் மற்றும் ரசிகர்களைப் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!

கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். தாயின் மீது அளவுகடந்த பாசம் கொண்ட அஜித், இந்த திடீர் இழப்பால் நிலைகுலைந்து போயுள்ளார்.

துபாயில் இருக்கும் அஜித் சென்னை வருகிறார்..  மோகினி மணியின் மறைவுச் செய்தி கேட்ட திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள்  தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.