கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வசித்து வந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அறிவழகன் (வயது 72) திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். வீட்டில் அமர்ந்திருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது , உடனே அருகிலிருந்தவர்கள் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் வழியிலேயே உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவழகன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையுடன் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு அதிமுக வட்டாரத்திலும், கரூர் மாவட்டத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
