அதிமுகவில் நீண்ட காலமாக பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்டமைப்பு வலுப்பெற்று வருவதுடன், மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் நேற்று  செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், கட்சி ஒன்று சேர வேண்டும் என்பதே தன்னுடைய தற்போதைய நோக்கமாக இருப்பதாக தெரிவித்தார்.

“அ.தி.மு.க. மீண்டும் ஒருமித்தமாக செயல்பட வேண்டும் என்பது தான் எனது விருப்பம். அதற்காக எனக்கு எந்த விதமான நிபந்தனைகளும் இல்லை. எப்போதும் கட்சியின் நலனுக்காகவே செயல்பட்டுள்ளேன்.  நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து எந்தவிதமான விமர்சனமும் வைக்கவில்லை. ஒன்றிணைந்த அதிமுகதான் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்” என ஓ.பி.எஸ். கூறினார்.

மேலும், நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சி குறித்து கூறிய அவர், “விஜய் கட்சி தொடங்கி செயல்படுகிற விதம் நல்லதாகவே இருக்கிறது. அவருக்கு எங்களது தார்மீக ஆதரவு உள்ளது” எனவும் கூறினார். OPS இவ்வாறு கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதிமுகவின் எதிர்காலக் கூட்டணிகள் மற்றும் அரசியல் பயணம் எப்படி அமையப்போகிறது என்பதற்கான எதிர்பார்ப்பு வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.