சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 9050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 9873 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78984 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் என்ற கிராமுக்கு ஒரு ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.