மதுரை ஆதீனத்தின் கார் சமீபத்தில் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மதுரை ஆதீனத்தை கொலை செய்ய எந்த சதியும் நடக்கவில்லை என்று கூறினார். பின்னர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுனர் தான் வேகமாக சென்று  விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதனால் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் வாகன விபத்து தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி மத மோதல்களை தூண்டும் விதமாக பேசிய மதுரை ஆதினத்தின் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மதுரை காவல் ஆணையரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். மேலும் அவரின் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது மதுரை ஆதினத்தின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது.