காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் வருமானவரித்துறையினரால் முடக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது..

பொதுமக்களிடமிருந்து நிதி உதவி பெறுவதற்காக உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகளையும் முடக்கியதாக புகார் எழுந்துள்ளது. காங்கிரஸின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். பொதுத்தேர்தல் சமயத்தில் வேண்டும் என்று வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கட்சியின் வங்கி கணக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகமே முடக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சி வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக ரூபாய் 210 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2018 இல் வருமான வரி தாக்கல் தாமதத்திற்கு இப்போது தேர்தல் நெருங்கும் போது நடவடிக்கை எடுத்தது உள்நோக்கம் கொண்டது. மின்கட்டணம் ஊழியர்கள் சம்பளம் மற்றும் காங்கிரசின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் இளைஞர் அணி, மகளிர் அணி மாணவர் அணியின் வங்கி கணக்கில் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.